முகப்பு

முகப்பு

எல்லையற்ற பரம்பொருள் தன்னை ஓர் எல்லைக்கு உட்படுத்திக் கொண்டு, புவியுலகிற்கு இறங்கி வருதலே அவதாரம் என்பதன் பொருள். இறைவன் எடுக்கும் அவதாரங்களில் எல்லாம் சிறப்புறுவது அவர் எடுக்கும் சத்குரு அவதாரமே. மறத்தை வீழ்த்தி, அறத்தை மேம்படுத்தி, மக்களின் உய்வுக்கு வழிகாட்ட இறைவனின் அவதாரமாய் வந்தவர் பகவான் ஸ்ரீ ரமணர். “பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தன் பூங்கழல்கள் வெல்கு” என மணிவாசகர் கூறுவதற்கு ஏற்ப, அஞ்ஞானத்தின் காரணமாய் நாம் எடுக்கும் பிறப்பிற்கு முடிவுகட்ட, விஞ்ஞான வழியை உணர்த்த வந்த மெய்ப்பொருளே பகவான் ஸ்ரீ ரமணர்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த பகவான் ஸ்ரீ ரமணரின் வாழ்க்கை, உபதேசங்களை உலகெங்கும் அறியச் செய்வதே திருவண்ணாமலை ஸ்ரீ ரமணாச்ரமத்தின் தலையாய நோக்கமாகும். தற்பொழுது தமிழ்கூறும் நல்லுலகம் பகவானது உபதேசங்களை இணையதளத்தின் மூலம் அறியும்பொருட்டு இப்புதிய இணையதளம் ஸ்ரீ ரமணாச்ரமத்தால் துவக்கப்பட்டுள்ளது. ரமண அன்பர்களுக்கு இவ்விணையதளம் பெரிதும் உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம்.